முதுமையைப் போற்றுவோம்...! - 5
போற்றுவோம்! போற்றுவோம்!
முதுமையைப் போற்றுவோம்!
அன்றைய இளையோர் இன்றைய முதியோர்
என்பதை உணர்வோம் - முதுமையைப் போற்றுவோம்!
முன்னேற்றத்தின் முன்னோடிகள் - நம்
எழுச்சிக்கு வழிகாட்டிகள் - நாம்
நடக்க நல்வழி காட்டியோர் - நமை
வளமுடன் வாழ வைப்போர்
நன்றியுடன் நினைப்போம் வாழ்த்துவோம்!
வான வெளிச்சம் அல்ல முதியோர்
ஞான வெளிச்சம் நமக்கு
வாழ்வை உருண்டு பிரண்டு கடக்க - நமை
தோளில் சுமந்தோரை நாம் தூக்குவோம்
சுமைகள் கண்டு நம்மைத் துவளவிடாத
முதுமையைத் தாங்கும் தூளியாக மாறுவோம்
தோல்வி வந்தால் முயற்சி தேவை
வெற்றி வந்தால் பணிவு தேவை
எதிர்ப்பு வந்தால் துணிவு தேவை
முதுமை வந்தால் மகிழ்வு தேவை
மகிழ்வு கொடுக்க மனமுருகுவோம் - நாம்
அர்த்தமுள்ள வாழ்வு வாழ
வாழ்ந்து முதிர்ந்த முதுமையைப்
போற்றுவோம்! போற்றுவோம்!!
- சி.அமலி சார்லெட் மேரி, பாளையங்கோட்டை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.