நீள்வெளிப் பயணம்
வெள்ளை வெளிச்சத்தில்
ஊடுருவிப் புகுந்து விடுகிற
யாருமற்ற வான் வெளியில்
எனக்குத் தெரிந்த அறிவியல்
அறிவுடன் பயணிக்கிறேன்...
மூளையில் எங்கிருந்தோ ஊறி வரும்
மூடநம்பிக்கையின் ஊற்றுகளிலிருந்து
சொர்க்கத்தின் அப்பிய காதுவழிச் செய்தின்
நினைவுகளையும் அதனைச் சார்ந்த
இன்பம் மிகுந்த பள்ளத்தாக்குகளையும்
கண்டுகளிக்கிறேன்
அங்கே சற்றே இளைப்பாற...
அமரும் இடத்தில் எனக்கு
சுற்றி நின்ற தேவதைகளால்
உணவு ஊட்டப்படுகிறது
திரும்பத் தொடர்கிற
என் நிலா தாண்டிய
நீள்வெளிப் பயணம்
இருள் நிறைந்த
வான வெளியில்
போய்க் கொண்டிருக்கிறது
வழி நெடுக நான் இங்கே
தவறவிட்ட என் நண்பர்கள்
மூதாதையர்களின் நல விசாரிப்புகளுடன்
தொடர்கிற இருள் நிறைந்த
நினைவு வழிப்பயணம்
வாயில் கதவில்
என் முகவரி பற்றிய
முழுத்தகுதி விசாரிக்கப்பட்டு
நரகத்தின் வாயில் திறக்கப்படுகிறது
தீடீரென விழித்துக் கொள்கிற
மூன்றாம் பிறை நிலவுக்கு
பின்னான பிந்திய இரவு உறக்கம்
நரகம் செர்க்கத்தின் கதைகள்
யாரோ முன்பின் கூறிய
பொய்க் கூற்றுகளுடன்
முடிவு பெறுகிறது
- ராசை நேத்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.