தகாத நிலைகள்
தாய்க்குலம் பேய்க்குலமாகிவிடும்
தகாத நிலைகள் இவை...
முள்ளில் வீசும்போது
பிள்ளை
முறைதவறிப் பிறந்ததென்று...
கள்ளிப்பாலுடன்
கடுநஞ்சும் நெல்லும்
நெஞ்சில் ஈரமின்றி
பிஞ்சுக் குழந்தைக்கு
பிசைந்து ஊட்டும்போது...
கழுத்தை நெரிக்கும்போது,
கள்ளக் காதலுக்குப்
பிள்ளை
கணமும் இடைஞ்சல் என்று...
காப்பகத்தில் சேர்க்கும்போது,
குழந்தை
கால் கை ஊனமாய்ப்
பிறந்ததென்று...
தகாத நிலைகள் இவை
தரங்கெட்டவை...
தலைகுனிய வைப்பவை
தாய்மையை...!
மாறுமா...
இந்தத் தகாத நிலைகள்!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.