என்னவள்...!
உன் கண்களால்
என்னைக் காண்கிறேன்!
உன் செவிகளால்
என்னைக் கேட்கிறேன்!
உன் ஸ்பரிசத்தால்
என்னை உணர்கிறேன்!
உன் நடையினால்
என் பாதையைச் செப்பனிடுகிறேன்!
உன் பேச்சினால்
என் வார்த்தைகளைத் திருத்திக் கொள்கிறேன்!
உன் சுவாசத்தால்
என் இதயத்துடிப்பைச் சீர்செய்து கொள்கிறேன்!
உன் பார்வையால்
என் பாவங்களைக் கழுவி விடுகிறேன்!
உன் வேதனையில்
என் இன்பத்தை மறந்து விடுகிறேன்!
உன் அழகில்
என் அலங்கோலங்களைத்
தூய்மைப் படுத்துகிறேன்!
உன் ஞானத்தால்
என் சூன்யத்தை மூடிக் கொள்கிறேன்!
உன் புன்சிரிப்பால்
என் மனப் புழுக்கத்தை நீக்கி விடுகிறேன்!
உன் அன்பால்
என் துன்பத்தைக் குறைத்துக் கொள்கிறேன்!
உன் வெற்றிகளில்
என் தோல்விகளை மறந்து விடுகிறேன்!
உன் பண்பில்
என் பலவீனங்களைப் புதைத்து விடுகிறேன்!
உன்னை என்னவளாகக் காண்கிறேன்!
என்னை உன்னிலே உணர்கிறேன்..!
- பாளை.சுசி .
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.