அந்திப் பூச்சிகளே...!
மலர்களே..!
தாவரவர்க்கத்தின்
மோகினிப் பிசாசுகளே..!
அலங்கார வெண்பட்டு
ஆடை உடுத்தி
அந்தி வேளையில்
அமைதிச் சூழலில்
பொலிவாய்
இதழ் விரித்து
நாணி, கோணி
நாணலாய்க் காற்றில்
நாட்டியமாடி
போதை மது
உள்ளடக்கி
நறுமணம்
நால்திசை பரப்பி…!
அல்லல் பட்டு
அலைந்து திரிந்து
அசதியில் வீடு திரும்ப
ஆர்வமுள்ள
அந்திப் பூச்சியை
ஆசை காட்டி
சுண்டி இழுத்து
மோசம் செய்யும்
சுயநலப் பெண்களே..!
மோகினிப் பிசாசுகளே..!
உங்கள்
மாய வலையில்
வீழ்ந்த பயன்
மலருக்கு மலர்
மகரந்தச் சேர்க்கை..!
உங்கள்
போதை மது
உண்ட கிறக்கத்தில்
மயங்கிக் கிடக்கும்
மதியில்லா
அந்திப் பூச்சிகள்..!!
- பாளை.சுசி
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.