வன்முறை வேண்டாம்!
எதென்றல் உலவும் சோலையை அழித்து
தீவிரவாத கூடாரம் அமைத்திடலாமோ?
தேசம் முழுதும் அமைதியை அழித்து
வன்முறை வாதம் பேசிடலாமோ?
அமைதியெனும் அலங்கார நகையிருக்க
அழிவெனும் அலங்கோலம் பூண்டடிலாமோ?
சமாதான மென்னுமோர் சங்கதி மறந்து
சமாதி குடியேற சம்மதிக்கலாமோ?
மனித நேயமதை மயானத்தில் புதைத்து
மிருக உணர்விற்கு உரமிடலாமோ?
புனித நதிகளின் புண்ணியநீர் மாற்றி
குருதி வௌ;ளம் புரண்டோடிடலாமே?
ஒழுங்கு முறையினை ஒழித்து விட்டு
விலங்கு முறையை விரும்பிடலாமோ?
கழுகும் காகமும் களிநடம் புரியும்
களம்போல் நாடு மாறிடலாமோ?
வன்முறை யென்னும் வழிமுறை மாற்றி
மென்முறையெனும் மேன்மை கொள்வோமே!
எம்முறை யாகிலும் ஏற்றுக் கொண்டிங்கு
வன்முறைக்கு மட்டும் தீயிடுவோமே!
- முகில் தினகரன், கோவை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.