குறைதீர்க்க வந்திடுவாய்...!
நட்டுவச்ச நாத்தெல்லாம் வெளஞ்சு போச்சி
நாடெல்லாம் நம்மசேதி தெரிஞ்சி போச்சி,
விட்டுவிட்டுப் போனமச்சான் வரவேயில்ல - எனக்கு
உன்னைவிட்டால் உறவெனவே யாரு மில்லே...!
காத்திருந்து கண்ணெல்லாம் பூத்துப் போச்சி
கனவினிலும் வருகுதய்யா உந்தன் பேச்சி,
சேத்துக்கோ என்னையும்தான் உந்தன் கூட - நீ
சீக்கிரமாய் வந்திடய்யா பாட்டுப் பாட...!
பறிகொடுத்தேன் இதயத்தை உன்னிடம் நானே
பலபேரும் குறைசொல்லும் பெண்ணாய் ஆனேன்,
குறிசொன்னார் சீக்கிரம் நீ வருவாய் என்று - என்
குறைதீர்க்க வந்திடுவாய் திரும்பி இன்றே...!
- செண்பக ஜெகதீசன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.