என் யன்னல் ஓரத்து நிலா!
எல்லைகள் தாண்டிய
உன் பார்வை - விழிகள்
ஏதோ ஒரு போர்மேகம்
கொண்டால் போல
பளிச்சிடும் உன் பார்வை
யன்னல் ஓரத்தில் தெரிகிறது
அந்தப் பார்வை - உன்
மரணக் கோலத்தின்
பார்வையென்று
நான் உணர்ந்தேன்
உன் வீட்டு ஓரத்து யன்னல்
கம்பிகளிடம் கேட்டுப் பார்த்தால்
தெரியும் நீ பார்த்த பார்வை
நீ அழுத உன் விழியில்
இருந்து வடிந்த கண்ணீர்த் -துளிகளை
யன்னல் ஓரத்தில் இருந்த
ரோசா செடியின் பூ இதழ்கள்
ஒற்றி எடுத்ததடி
உன் விழியில் இருந்து - வடிந்த
உப்புக் கண்ணீர்த்துளிகள்
உன் வீட்டு யன்னல்
கம்பியின் மேல்
காதல் கொண்டு
கம்பி துருப்பிடித்துவிட்டதடி
மெளனம் கலந்த முகத்துடன்
வாடிக் குறுகிய உடம்புடன்
வார்த்தைகள் பேச முடியாத மனதுடன்
உன் வீட்டு யன்னல் ஓரத்தின் வழி
விழி வைத்து எதற்காக காத்திருக்கிறாய்
என் யன்னல் ஓரத்து நிலவே
நீ காதல் என்னும்
கடலில் மூழ்கி விட்டாய்
அந்த முத்தான முத்தை
நான் எடுக்க வந்திடுவேன்
என் யன்னல் ஓரத்து நிலவே
உன் வீட்டு யன்னல் ஓரத்தின்
வழி காத்திரு
என் கண் விழியால் உன்னை
திருடிப் போயிடுவேன்...
- ரூபன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.