இரத்த தானம் செய்யுங்கள்...!
ஒரு சொட்டு மழைத்துளி
உலகைக் காக்கும் என்றால்
உங்கள் ஒரு சொட்டு இரத்தம்
ஒரு குடும்பத்தையே காக்கும் !
விபத்து, நோய் எனும் பெயரில்
வருகின்ற மரணத்திற்கான
எமனின் பாசக் கயிற்றை
குருதியால் அறுக்கலாம்
உங்கள் குருதியால்
உலகையே காக்கலாம்
உங்கள் இரத்த தானம்
இரத்தத் தேவைக்காகப் போராடும்
ஒரு உயிரை மீட்கப் போராடும்
இறப்புக்குச் சென்றவனை
உயிர்த்தெழச் செய்யும்
இரத்ததானம் செய்யுங்கள்...!
இறப்பை நோக்கிச் சென்றவரை
மறுபிறப்பாக்க உதவுங்கள்!
-கவி கண்மணி,கட்டுமாவடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.