உறங்க நினைக்கிறேன்...!
இரவு நேரம்
படுக்கையறைச் சாளரத்தின்
வெளியே...
நிலவு, விண்மீன்கள்...!
வெளியிலிருந்து
உள்ளே வரும்
சில்லென்ற காற்று...!
இயற்கையை ரசித்தபடி
உறங்க நினைக்கிறேன்...
தெருக்கோடிக் குடிசையில்
குழந்தையின் அழுகை ஒலி
அதை நிறுத்த அதன்
அம்மாவின் பாட்டு
கேட்டுக் கொண்டே
உறங்க நினைக்கிறேன்...
தொலைவில் செல்லும்
வாகனத்தின் இரைச்சல்...
இடையிடையே
மனைவியின் குறட்டை...!
இதையெல்லாம் தாண்டி
உறங்க நினைக்கிறேன்...
கண்ணயரும் வேளையில்
பட்டென்று கலைந்தது
என் உறக்கம்...!
இடையில் ஏற்பட்ட
மின் தடை...!
- கவி.மதுரன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.