வானவில்
இயற்கை அன்னையின்
கைவண்ணத்தில்
வானத்தில் உருவான
வண்ணக் கோலம்!
மேகமாம் வெள்ளைத் தாளில்
சூரியன் போட்ட ஒளிக் கோலம்!
உலகின் ஏழு அதியங்கள் போல்
இயற்கையின் எட்டாவது அதிசயம்!
வானத்தின் வர்ணஜாலம்!
வானப் பெண் மழை எனும்
வண்ண மையைத் தர
சூரியன் தன் கதிர்க் கையால்
அதை வாங்கி வரைந்த
வண்ண மிகு ஓவியம்!
இயற்கையெனும் பருவப் பெண்
எடுத்து வைத்த
வண்ணப் புருவங்கள்!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்று என்றும்
நமக்கு நல்ல அறிவுரைகள்
நல்கும் ஆசான் வானவில்!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.