காதல் கடிதங்கள்

1.
முகம் காணாத நெஞ்சம் - என்
முகம் காணத் துடிக்கிறதே
அவளின் பிஞ்சு விரலினால்
காகிதத்தில் பலநூறு கோட்டினிடையே
வரையும் காதல் உணர்வுகளை
தேடிப் படிக்க பைத்தியமாய்
அலைவேனே தபால் நிலையங்களில்...
எனக்காக நீ வரையும் மடலில்
உன் குவிந்த உதட்டின் புன்னகை
ரோஜாப் பூப்போல சிரிக்குமடி…
விழி மூடி உறங்கும் போதும்
என் தலையணையின் கீழே
உன் குவிந்த உதட்டின் புன்னகை
முத்தமிட்டு விழி மூடி உறங்க வைக்குதடி...
2.
நீ இருப்பதும் வெகு தூரம்
நான் இருப்பதும் வெகு தூரம்
உன் நினைவு இருப்பது என் விழியோரமல்லவா
உன் காதல் கடிதம் வருமென்று
என் வீட்டுச் சுவரில் தொங்கி இருக்கும்
நாட் காட்டியில்… நாட்களை
ஒவ்வொன்றாக எண்ணியபடி…
உன் நினைவை - என் நெஞ்சில்
தாங்கியபடி காலம் நகருதடி…
3.
உனக்காக நான் காதல் கடிதம் எழுதும் போது
என்னவென்று தெரியாது…
என் பேனா.முனையில் இருந்து...
மைத்துளிகள்தான் சிந்தும்
ஆனால்; சில நாட்களாக என் கண்ணீர்த் துளிகளும்
அந்த காகிதத்தில் சிந்தியதடி…
நான் அனுப்பிய காதல் கடிதத்துக்கு
பதில் உன்றும் வரவில்லையென்று...
தபால்காரரிடம் எத்தனை தடவைதான் கேட்டிருப்பேன்…
அவரின் பதில் ... வரவில்லை என்றே வருகிறது...
4.
கண்ணில் மலர்ந்த காதலை - உனக்குக்
கவிதையாக்கிக் கடிதம் எழுதினேன்
கவிதையாக்கிய காதல் கடித்ததை
இறுதியில் நீ மௌனமாக்கினாய்…
அந்த மௌனம்
என் உயிரைச் சிறிது சிறிதாக
போக்கிக் கொண்டிருக்கிறது...!
- ரூபன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.