நாளை நமதே...!
நாளைய உலகம் நமதென்று
நம்பிக்கையோடு நீ நடைபோடு!
விடியாத காலமும் விடியுமென
வீறுடன் நீயும் முன்னேறு!
உழைத்தால் உலகம் உனதாகும் - என்று
உண்மையாய் நீயும் நம்பிவிடு!
உன்னால் முடியும் என்ற உண்மையினை
உள்ளத்தில் நீயும் எழுதிவிடு!
உழைக்காத பேருக்கு உலகமில்லை - அவனை
உலகம் இழிவாய் நடத்திடுமே!
உழைப்பால் உயர்வோம் என்ற உண்மையினை
உலகிற்கு நீயே உணர்த்திவிடு
உழைக்காது சேர்க்கும் பொருளுக்கு - என்றும்
ஆபத்தென்றே உணர்ந்துவிடு!
ஆசை கோபம் களவு எல்லாம் – நம்மை
அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்!
அன்பும் அறமும் ஆக்கமுமே – நம்மை
உலகில் என்றும் உயர்த்திவிடும்
நம்பிக்கை ஒன்றே நாளும் நம்மை
நல்ல வழியில் இட்டுச் செல்லும்!
நாளை நமதே என்றெண்ணி
நாளும் நன்கு உழைத்திடுவாய்!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.