எனக்கு என்னாச்சு...?
மணக்கும்மல்லிப் பூவெடுத்து
கொண்டையில சூடிக்கிட்டு,
பாடும் அந்த கொலுசெடுத்து
காலிரண்டில் பூட்டிக்கிட்டு,
விளையாடும் வளையல்கள
கையோட கோர்த்துக்கிட்டு,
அட்டிஒட்டி நெத்திச்சுட்டி
துணைக்குக்கூட சேர்த்துக்கிட்டு,
நீ நடந்த நடையப் பார்த்து
நின்னுபோச்சி யென்மூச்சி;
மாமனென்ன பார்த்துவிட்டு
வெக்கத்துல நீ குனிய,
தரைஉன்னப் பாத்துவிட்டு
வெக்கத்துல சிவந்துபோச்சி;
தாலிகட்ட மேடையில
காத்திருக்கும் நேரத்துல,
கவிதையெல்லாம் கொட்டுதடி
ஐயோ! எனக்கு என்னாச்சு...?
- காதலின் காதலன், திருநெல்வேலி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.