பயம் மிஞ்சுகிறது!
பெரும் பல்லிகள் பிளந்த நாவுடன்
எங்களைக் கொசுவெனத் துளாவியன கண்டுத்
திடுக்கிட்டு விழித்தேன்
வகை தொகை தெரியாது
இருள் குகை எனை உள்ளிழுத்துக் கொண்டது
பெரும் மலை என் மேலிருப்பதாக
அறிவுக்குப் பொறி தட்டியது.
சுமையாய் சுமப்பது கூட சுகமாய்
இருப்பதாகப் பல கூக்குரல்கள்
சந்துக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சந்தோசமா, சங்கடமா தெரியவில்லை
காதுகள் சுகப்பட்டது .
கனவாய்க் காலங்கள் கரைந்து போய்
சூன்யத்தைத் துப்பி விட்டுச் சென்றதை
யோசித்தாலும் பயமே மிஞ்சுகிறது.
கனவுகள் பயங்கரமானவை.
- பாரதிசந்திரன், திருநின்றவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.