நோன்பே! நோன்பே!
நோன்பே! நோன்பே! சற்று நில்!
நீ என்னிடம் தினமும் இணைகின்றாய்
என் உடலும் உள்ளமும் தூய்மையடையச் செய்கின்றாய்
பசியை மறந்து பக்தியை வளர்க்க உதவுகிறாய்.
நோன்பே! நோன்பே! சற்றுக்கேள்!
நானோ ஆசை நிரம்பிய மனிதன்
நீயோ அவ்வாசைகளை அடக்கி விடுகிறாய்
அதனால் நான் இறைபக்தியாளனாகிறேன்.
நோன்பே! நோன்பே! சற்று பார்த்திடு!
நானோ பலவீனன், பசியைப் பொறுக்காதவன்
நீயோ என்னைத் தொட்டுப் பொறுமையைஊட்டுகிறாய்
அதனால் நான் எதனையும் பொறுத்துக் கொள்கிறேன்
நோன்பே! நோன்பே! சற்று கதைத்திடு!
நானோ கோபம் கொள்பவன் - நீ
என்னுடன் இருக்கும் நாளெல்லாம்
கோபம் தணிந்து அன்புப் புன்னகையில் மகிழ்கிறேன்.
- கவிஞர் எம். வை. எம். மீஆத், தும்புளுவாவை, இலங்கை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.