உன்னதப் பறவையானேன்...!!
கல்லூரி வாழ்க்கையெனும்
இளமை பூஞ்சோலையில்
வறுமை வானம் தொட்ட
சிறகொடிந்த வானம்பாடியாய்
ஏக்கம் மறைத்த
இரும்புக்கூட்டிற்குள் அடைந்து
குடும்ப நிலையுணர்ந்து
அகச்சோகம் மறைத்து
நட்புச் சோலைக்குள்
உலவிய சிறு பறவை நான்...!
வாழ்வில் சந்தித்த
சிந்திக்கத்தக்க செய்திகளை
என்னுள்ளே முடக்கிவிடாமல்
ஆர்வ 'மை' ஊற்றி
ஆக்கமாக்கும் திறமைச் சிறகை
விரித்து இலக்கியவானில்
பறக்கும் முயற்சியில்
வானத்தின் உச்சியில்
ஆனந்த வானம்பாடியாய்
உலவும் உன்னதப் பறவையானேன்..!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.