நோன்பு நோற்பு!
நோன்பு நோற்றால்
உடலும் உள்ளமும்
அல்லாவுக்கு - முற்றும்
பணிந்து இயங்கும்
வீண் வார்த்தை வாயிலிருந்து
சிறிதும் வருவதில்லை
அடுத்தவர் மீது கோபம்
கிஞ்சித்தேனும் எழுவதில்லை
இறைநாமம் நாக்கினில்
தொனிக்கும்
இறை நினைவு ஒன்றே
நோன்பாளிக்கு உரமூட்டும்.
அடுத்தவர் குறை கதைப்பதோ
விமர்சிப்பதோ நோன்பாளிக்குத்
தேவையில்லை
ஒவ்வொரு செக்கணும்
அல்லாவை ஸிக்ரு பண்ணி
இதயத்தைத் தூய்மையாக்க
நோன்பாளி முயலவேண்டும்
திருக்குர்ஆனை ஓதி விளங்கி
இறைகட்டளை பேண வேண்டும்
நோன்பு துறக்கும் வரை
சண்டை சச்சரவு தவிர்க்க வேண்டும்
இப்தார் வேளையில் ஆன்மீக
ஈடேற்றம் நாடி துஆக் கேட்கவேண்டும்.
- கவிஞர் எம். வை. எம். மீஆத், தும்புளுவாவை, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.