ஹார்மோன் பார்வை
நீ
பட்டாம்பூச்சி தேடிக்கொண்டிருக்கிறாய்
பட்டாம்பூச்சி உன்னை தேடிக்கொண்டிருப்பது
இயற்கை முரண்
நீ
சிரிப்பதும் சிணுங்குவதும்
உன் உரிமை
அதை
ரசிப்பதும் லயிப்பதும்
என் உரிமை
நீ
வருவதையும் என்னைக்
கடந்து செல்லப்போவதையும் எப்படியும்
உணர்த்திவிடுகிறது இயற்கை
இதுதான் காதல் என்கிறார்கள் என் நண்பர்கள்
நீ ஒத்துகொள்ளாமலே காலத்தைக் கடத்துகிறாய்
எப்பொழுதும் அலைந்து கொண்டேயிருக்கும்
என் ஹார்மோன் பார்வையில்
நீ மட்டும் விதிவிலக்கு
நீ முத்தம் தராமல் போய்விடுகிறாய்
வறண்டு விடுகிறது பாலைவனமாய்
என் கன்னங்கள்
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
தினமும்,
ஆனால் உள்மனம் சொல்கிறது
நம் காதலுக்குக் காத்திருப்பதாய்
நீ
கிழித்துவிட்டுப் போய்விடுகிற
மௌனத்தை வார்த்தைகள் கொண்டு
தைத்துக் கொண்டிக்கிறேன்
கவிதையாகிறது
என்னுடன் அமர்ந்து
பேசிவிட்டுப்போன பின்பும்
நீ அமர்ந்த இடமும் நானும் வெறுமையாய்
- ராசை நேத்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.