வரதட்சணை!
குத்து விளக்கேற்றி
குலமகளாய்
குலம் விளங்க வாழ
வர தட்சணை
ஊர் கூடி
வாழ்த்தி மொய் எழுதி
விருந்துண்ணும் வைபவம் மலர்ந்து
வர தட்சணை
பணம் இருக்கிறதோ இல்லையோ
சூழ்ந்து வரும்
சுற்றம் மதிக்கும் கௌரவம்
வர தட்சணை
கொடுத்து வாங்கும்
வியாபார சந்தையென
திருமணமேடை விழா காண
வர தட்சணை
திருமணச் சந்தையில்
படித்துப் பெற்ற பட்டத்தின்
மதிப்புக்கு மதிப்பு
வர தட்சணை
காவு கேட்கும் கூர்கத்தியென
ஆண் பெற்ற மனிதன்...
தலை கொடுக்கும் பலியாடென
பெண் பெற்ற மனிதன்...
இணைந்து சம்மதித்து
சம்பாதிக்கும் இல்வாழ்க்கை
வர தட்சணை
தட்சணை கொடுத்து
வாங்காத இல்வாழ்க்கை
வாழ்வாங்கு வாழும் மகத்துவம்
உணர்த்தச் சொல்லி காலதேவனுக்கும்
தட்சணை தரும் வியாதி
மடமை நீங்கி
பகுத்தறிவு பயன்படுத்தும்
செயல் திறன் மனிதர்
பல்கிப் பெருகும் காலம்
வர வரதட்சணை நோய் நீங்கும்...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.