தீ...பா...வளி...? தீபாவளி...!
காக்கும் கடவுள்
நரன் வடிவு அசுரனை அழித்துத்
தந்த தீப ஆவளிக் கொண்டாட்டம்...
வஞ்சிக்கும் மனிதன்
நஞ்சு நிறைநெஞ்சில்
அசுர வடிவு நரனாய்
எதிர் சந்ததிக்குத்
தருகிறானோ தீபவளி கொல் நாட்டம்...
இயற்கை நலனுக்கும்
தொழிலாளர் உயிர் உடலுக்கும்
கொள்ளி வைக்கும்
மருந்தில் பட்டாசு தயாரித்த
வெற்றிக் களிப்பில்
வெடி வெடித்து
மத்தாப்பு கொளுத்திய மகிழ்ச்சியில்
இனிப்பைப் பரிமாறுகிறானோ...?
அன்றி ...
இரசாயனப் புகையால்
தீவினைப் பாட்டாய்
தீய பாதையில் காற்றை
நகர்த்தி ஆரோக்கியத்திற்குக்
கொள்ளி வைத்தலை
எதிர்சந்ததிக்குப் புகட்டும்
நோக்கமாகிக் கொண்டாடுகிறானோ...?
எதுவும் தெரியாமல்
புரிந்தும் புரியாத ஜடமாய்
நானும் கொண்டாடுவதேனோ
வெடி வெடித்து
தீ...பா...வளி...? தீபாவளி...!
-நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.