கவலைக்கும் மருந்து...!
மருந்துண்டு மருந்துண்டு
கவலைக்கெல்லாம் மருந்துண்டு
மௌனமாக இருந்திடு
மன பாரத்தைக் கலைந்திடு
கொட்டித் தீர்த்து அழுது புரண்டாலும்
கொடுமை தீராத விழுது
ஆழ்ந்த மவுனத்தில் கவலைக் காரணிகளை
ஆழ்ந்து சிந்தித்து மாற்று பழுது
மாறும் மனதின் மகத்துவம்
உணர வைக்கும் காலம்
விழி கண்டு மனம் கனத்த
வழி(லி)களை நேர்படுத்தும் காலம்
மாற்றிடும் மாற்றிடும் கவலைகளை
தேற்றிடும் தேற்றிடும் காயங்களை
காலத்தின் மேல் பாரத்தைப் போட்டு
காரியங்களைக் கருத்துடன் திட்டமிட்டு
கடமை தவறாது செய்திடு
மடமை சிந்தையைத் தவிர்த்திடு
கவலைகள் பஞ்சாய்ப் பறக்கும்
மனத் தெளிவும் பிறக்கும்
வெற்றி வழி திறக்கும்..!!
மருந்துண்டு மருந்துண்டு
கவலைக்கெல்லாம் மருந்துண்டு..
-நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.