அவளின் நினைவு
பௌர்ணமி நிலா போல்
மூன்றாம் பிறை நெற்றித் திலகம்
கணனித் திரையில்பளிச்சிடும்
உருவம் கண்ணெதிரே வந்தது.
கார்கால பனிக்குளிருக்கும்
வரண்ட காற்றுக்கும்
போராடும் இலைகள் போல்
அவளின் முகம் வாடி வதங்கியது...
என்னவளக்கு என்னவனின்
குரலோசை கேட்டபோது
கதிரவன் ஒளிக் கீற்றுக்கு
வதனமே மலரும்
ஆயிரம் இதழ்தாமரை போல்
ஒளி விட்டு சிரித்தது
என்னவளின் புன்னகைதேசம்.
ஈரைந்து நாட்கள் என்னவளைப் பார்க்கவில்லை
என்னவள் என் நினைவை நெஞ்சில் சுமந்தபடி.
அழுதழுது வடித்த கண்ணீரை
அவளின் கைக்குட்டை ஒற்றனம் போட்டது.
அதனைப் படம் பிடித்து
என் மின்னஞ்சல் பெட்டிக்கு அனுப்பினாள்.
நித்தம் நித்தம் காலையில் திறந்த போது
அத்தனையும் கண்ணெதிரே தேன்றியது.
சத்தியமாய் நான் இனி செல்ல மாட்டேன்
சாகும் வரைஉன்னருகில் நான் இருப்பேன்
-ரூபன்,மலேசியா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.