இயற்கையிடம் படித்த பாடம்!
இலையில் பனி
இனிதாய் உறங்குகிறது,
இதை விரட்டக்
கதிர் வருகிறது...!
மரத்தில் அணில் பதுங்குகிறது,
அதைக் கொத்த
காக்கை வருகிறது...!
கறையான், புற்றில்
கரந்து வாழ்கிறது,
அதை விரட்ட
பாம்பு வருகிறது...!
ஒளி தேடி ஓய்ந்திட
ஈசல் வருகிறது,
பாய்ந்து அதைப் பிடித்திட
பல்லி வருகிறது...!
ஒன்றை ஒன்று
விரட்டிக்கொண்டிருப்பதுதான்
இயற்கையோ...!
பார்த்தான் மனிதன் இவற்றை,
படித்துக்கொண்டான் பாடம்-
தேனீ சேர்த்த தேனைத்
தேடிப்பிடித்துத் திருடுகிறானே...!
இந்த குணம் இவனிடம்
நிலைத்தேவிட்டது-
நிரந்தரமாய்...!
-செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.