விழித்தெழுக...!
சாதி மதங்களைப்
பார்த்திராதவனாவான்
நாளைய தமிழன்...
வேற்றுமொழி கலப்பில்லாமல்
நாளைய தமிழன்
பேசுவான் தாய்மொழி...
நாளைய தமிழன்
காலடியில் மடியும்
வரதட்சணை சாத்தான்...
மரம் வெட்டும்
கைகளை வெட்டுவான்
நாளைய தமிழன்...
மணல் கொள்ளையிட
நாளைய தமிழன்
நடுக்குறுவான்...
நாளைய தமிழன்
வாழ்வு வரலாறு காணாத
ஈரம் கொண்டிருக்கும்...
புதுமைகள் விளையும்
கனவுத் தோட்டத்தில்
நாளைய தமிழன்...
மெய் வாழ்வில் சமத்துவ
மனிதனாக நாளைய தமிழன்
செதுக்கப்படுக இக்கணமே...
இன்று காணும்
கனவு மெய்பட விழித்தெழுக
தமிழினமே...!!
-நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.