ஒரு வழிப்பாதை
மேகம் புதைந்த சூரியன்
விலகிக் கொண்டிருந்த நேரம்
காலை தொடங்கியிருந்தது
திருநீரிடாத ஓர் இரவில்
கனவுகள் முழுவதும்
ரத்தக் காட்டேரிகள்
மறந்தும் மறைந்தும் போன
கனவுகளை அவசரகதியில்
எழும் காலைகளில் மீண்டும்
புதுப்பிக்க முடிவதில்லை
ஒற்றையடிப் பாதையில் வழி விட்டு
வளரும் புற்களுக்கிடையே
தொலைத்திருந்தன
பல காலடிகள்
கடற்கரையில் பரவியிருந்த
மணலில்
பல மணற்குடில்கள்
தென்றல் கலைத்த முடிகளுக்குள்
துவண்டிருந்த ஒரு முகம்
பணி முடிந்து பயணம்
கொண்டிருந்தது
- ராசை நேத்திரன், பெங்களூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.