பாட்டு!
தூளியில் தூங்கும் குழந்தைக்கு
அன்னை சொல்லும் வார்த்தைகள் பாட்டு
கொஞ்சும் மொழியில் மழலையின்
கொச்சை வார்த்தைகள் பெற்றோர்க்குப் பாட்டு
மொட்டவிழ்ந்த மலரின் ஓசையும்
வட்டமிடும் வண்டுக்குக் கேட்கும் பாட்டு
இளம் வயதில் பருவக் கோளாறில்
வரும் நினைவலைகள் வாலிபருக்குப் பாட்டு
முதியோர்க்குத் தன் வாழ்க்கைப் பயணத்தின்
பழைய நினைவுகளே கொட்டித்தரும் பாட்டு
அரசனுக்கு அவன் தன் குடிமக்கள்
கொண்டாடிப் புகழம் கோஷங்களே பாட்டு
ஆண்டிக்கு அரசமரத்தடியில் அமர்ந்து
செய்யும் தெய்வச் சிந்தனையால் வரும் பாட்டு
ஏழைக்கு பசிக்கும் பொழுது சாப்பாடு
கிடைக்காத ஏக்கத்தால் வரும் துயர் பாட்டு
அஞ்சாத சிங்கமாய் தோள் தட்டி நிற்கும்
வீரனுக்க வெற்றி தந்த களிப்பால் வரும் பாட்டு
உழைக்கும் உழவனுக்கும் தொழிலாளிக்கும் வரும்
போதிய ஊதிய உற்சாகத்தில் வரும் குத்துப்பாட்டு
கச்சேரியில் கூட்டத்தில் எல்லோரும் கேட்கலாம் பாட்டு
மனக்கூட்டில் எழும் சிந்தைகள் ஒருவர் கேட்கும் பாட்டு
நாம் படும் பாடெல்லாம் கூட நல்ல அனுபவப் பாட்டு
- சா. துவாரகை வாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.