பிரம்மனாலும் முடியவில்லை...
என்னவளே உன்னைத் தவிர
மற்ற பெண்களைக்
நான் காணும் பொழுதெல்லாம்
நினைத்துக் கொள்வேன்...
அவர்களையெல்லாம்
பிரம்மன் கடமைக்குப்
படைத்திருக்கிறான் என்று...
என் தேவதையே...!
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான்
பிரம்மன் கண்ணுறங்காமல் செய்த
கடமையை எண்ணி
வியந்து நிற்கின்றேன்...!
பிரம்மனின்
கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் தான்- பிரம்மனின்
கற்பனைகள் அனைத்தும் தொலைந்த நாள்...!
அதன் பிறகு பிரம்மனால்
கற்பனை செய்ய முடியவில்லை...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.