எட்டி நின்னே பாத்துக்கலாம்...!
ஏலேய்...
கூர மேல மயில் நிக்குது
பாருன்னு ஆத்தா சொன்னதுல நா(ன்)
கிட்ட ஓடி எட்டிப் பாத்ததுல...
ஆத்தா கரு வாட்டம்
தட்டின எருவாட்டி குவியலுக்கு(ம்)
நெற் பதரு(சருகு) குருகுக்குமா மயில்
எகிறிப் பறந்து நின்னுடிச்சே!!
இன்னும் கிட்ட போய் பாத்தா...
ஆத்தா நாளெல்லா(ம்) ஒழச்சி
நொந்து நூலாகி
கயிறாட்டம் குவிச்ச
வக்கப்(வைக்கோல்)படப்புக்கு
எகிறிடுமோ இல்ல வேறு
எங்கனாச்சும் பறந்திடுமோ!!
ஐயோ!!வேணாம்...வேணாம்...
கிட்ட போ வேணாம்...
எட்டி நின்னே பாத்துக்கலாம்
மயில் அழக...!!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.