பொம்மை பாரு...!
பொம்மை பாரு! பொம்மை பாரு!!
தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மை பாரு...!
பத்தொன்பதாம் நூற்றாண்டு
மன்னன் சரபோஜி காலத்தில்
சிறப்புற்ற ராஜா ராணி குறிக்கும்
தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மை பாரு...!
பிடித்துத் தள்ளினாலும்
கீழே விழாமல்
புவிஈர்ப்பு விசைக்கேற்ப
செங்குத்தாக இயங்கும்
தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மை பாரு...!
அடிப்பாகம் பெருத்தும்
மேல்பாகம் குறுகியும்
களிமண்ணில் வடிவு பெற்று
வண்ணப்பூச்சில் குளிக்கும்
தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மை பாரு...!
காகிதக்கூழ் மரத்தூள்
நவீன களிமண்ணிலும்
உருவாகி உடல் பாகங்கள்
கம்பியில் பொருந்தி ஆடும்
புதுமை தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மை பாரு...!
நவராத்திரி கொலுவில்
தவறாது இடம்பெறும்
தலையாட்டி பொம்மை
கலைத்தொழில் வியந்து
போற்றி...
பொம்மை பாரு! பொம்மை பாரு!!
தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மை பாரு...!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.