ஒரே ஒரு புன்னைகை!
சில நேரங்களில்
உன்னோடு சண்டையிட்டு
பேசமால் இருப்பதன்
காரணம் தெரியுமா...??
நீ
ஏக்கத்தோடு பார்க்கும் போது
குழந்தை போலவே
தெரிகிறாய்...
*****
எல்லோருமே
நேரில் பார்ப்பதை விட
புகைப்படத்தில்
அழகாய்த் தெரிவார்கள்
நீ மட்டும்
விதிவிலக்காய்
புகைப்படத்தில்
இருப்பதை விட
நேரில்
அழகாய் தெரிகிறாய்...!!
*****
கவிதைகளை
எழுதி விட்டேன்
தலைப்பைத் தேடுகிறேன்
ஒரே ஒரு
புன்னைகை செய்
உன் கன்னக் குழியிலிருந்து
எடுத்துக் கொள்கிறேன்...!
- கவிஞர் பிறைமதி, அய்யாவடி (குடந்தை).

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.