நம்பிக்கை சிறகு
பற பற
பட்டறிவு தரும் பட்டம்
வசமாகி வரும் வெற்றி
நம்பி(க்) கை சிறகு விரித்து
பற பற...
முயற்சி இருந்தால்
பயிற்சி எளிதாகும்
பற பற
விண் தொட முயல்
நம்பி(க்) கை சிறகு விரித்து
பற பற...
வானம் தொடும் தூரம்
வாய்ப்பு நடும் நேரம்
பற பற
கடமை ஏணி எடு
நம்பி(க்) கை சிறகு விரித்து
பற பற...
பகலிரவு மாறும் கட்டம்
பனி விலக்கும் ஒளித்திட்டம்
பற பற
நம்பிக்கை நூல் பற்று
நம்பி(க்) கை சிறகு விரித்து
பற பற...
நம்பிக்கை கோல் எடுத்து
தன்னம்பிக்கை கால் பதித்து
பற பற
பகுத்தறிவு திறம் பற்று
நம்பி(க்) கை சிறகு விரித்து
பற பற...
பற பற
பட்டறிவு தரும் பட்டம்
வசமாகி வரும் வெற்றி
நம்பி(க்) கை சிறகு விரித்து
பற பற...
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.