நேர்மை பாதை
போகும் பாதை எதுவென்று
யோசித்து நடத்து பயணம்தான்
சோதனை தவிர்க்கும் தோதென்று
போகிற போக்கில் எடு நேர்(மை) பாதைதான்
கண் போகும் பாதை எல்லாம்
கண்டு நன்றென கால் நடக்க வேண்டாம்
பெரியோர் பாதம் பட்ட நேர்(மை) பாதையெல்லாம்
பெருமை பெற்றதென மறக்க வேண்டாம்...
பாலொத்த நிறம் காட்டும் கள்ளில்
காவல் சத்து உண்டென முயங்கலாமோ
பாழாக்கும் குறுக்குப் பாதை முள்ளில்
கால் வைத்தல் கற்கண்டென மயங்கலாமோ...
எண்ணம் தெளிவுடன் பகுத்தறிந்து
எட்டுவைக்கும் பாதம் நலம் பெறும்
வாய்மை நேர்(மை) பாதை நடந்தால்
வாழ்க்கைப் பயணம் சிறப்புறும்..!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.