நினைவுப் பயணம்
நாளும் மனித மனங்கள்
மாய்ந்து கொண்டிருக்கும்
மண்ணுலகில் மறக்க
முடியாத உன் நினைவுகள்
மட்டும் இன்னும் என்னுள் நிஜமாக...
கடந்து சென்ற உன் நினைவுகளை
மீட்டெடுத்து நாளும் நான்
மீட்டிப் பார்கின்றேன் இதமாக...!
உன் புன்னகயாலும்
சுட்டெரிக்கும் இரு விழிகளாலும்
சுட்டெரித்த அந்த
இனிமையான நாட்கள்...
மனதினில் நாளும் உலா வருகின்றன...
அந்நாட்கள் இனி
திரும்புமா என் வாழ்வில்...?
ரோஜாவின் இதழ்களைப் போன்று
மென்மையான உன்
வார்த்தைகள் எங்கே?
எப்போதும் இதம் தரும் உன்
பார்வைதான் எங்கே?
சில காலங்கள் உன்னுடனே
வாழ்ந்து கொண்டிருந்தேன்
நினைவாலே நான்...!
அந்நினைவுகள் யாவும்
நிஜமாகும் என்று...
வடித்து வைத்திருந்தேன் எண்ணங்களை...
உணர்த்துகின்றது வாழ்வு!
அது நிஜமல்ல வெறும் நிழல்தான் என்று
நினைவுகள் யாவும் நிழலாகவும்...
வாழ்க்கை தனிமையிலும்
எப்போதும் சுழன்று கொண்டிருக்கின்றது...
இந்த மண்ணுலகில்
பல கேள்விகளோடு
நாளும் தொடர்கிறது...
உன் நிஜமான நினைவுகளுடன்
என் வாழ்க்கைப் பயணம்
அதுதான் என் வாழ்வின்
நினைவுப் பயணம்…!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.