ஆற்றங்கரை எங்கே...?
அந்த
யாருமற்ற நதிக்கரையில்
சின்ன சின்ன
நண்டுகள்,
சுருட்டிப் படுத்துகிடக்கும்
நத்தைகள்...
புதைமணல்
பொக்கிஷமாய்
வண்ணக் குழங்கல்
துணைக்குக் கொஞ்சம்
சங்கு...
இரு இதழ்
மடித்தது போல
அந்த சோழிகள்...
வலதுபுற
தென்னை.
ஜிலு ஜிலு
காற்று...
துவைத்த ஆடை
ஈரம் உலர
கொடிமரத் தொங்கல்
வெகு தூரத்தில்
நீயும் நானும்
தோள் சாய்ந்தது
போல உள்ள
அந்தப் புகைபடத்தை
பார்த்து கேட்க ஆரம்பித்து விடுவான்...
மகன்-
அம்மா, இதற்கு
பெயர்தான் ஆற்றங்கரையா...?
அவனுக்கு எப்படிப்
புரியவைக்க
மணல் கொள்ளை
கொண்ட அந்த
பாதள பள்ளம் தான்
அந்த ஆற்றங்கரையென்று...!
- ஸ்டெல்லா தமிழரசி,சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.