தீராத கத்திரி வெயில்...
விரித்துப்போட்ட வெயிலில்
சுருண்டுகொள்ளும் புழுவென
வீதியெங்கும் மனிதக்கூட்டம்.
காயும் வெயிலில்
காக்கையின் குரல் ஒடுங்கி
இதயத்துடிப்பைக் கொத்துகிறது.
நெற்றி கழுத்து மார்பிடுக்கில்
கந்தகமாய்க் காந்தும் வெப்பலை
வழித்துப்போட்டபடி
பணம் எண்ணிச் சுமந்தபடி
பள்ளி வரிசையில் நிற்கிறேன்.
அமைதியாய் இருங்க என்பதை
ஆங்கிலத்தில் சைலன்ஸ் ப்ளீஸ் என்று
அதிகாரக் குரலில்
வீடு அதிரச் சிரிக்கும் மகனின் குரல்
விரைவாய்க் கிளம்புகிறது
வீட்டின் மேற்கூரையைப் பிளந்துகொண்டு.
நாளை கொட்டுமழை கொட்டிப் பெய்து
இந்தக் கத்தரி வெயில்
கடக்கக்கூடும்...
- கலை இலக்கியா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.