ஓடிப் போன உறவு
ஆறு கடக்கும் வரை
அண்ணன்தம்பி
ஆறு கடந்தால்
நீ யார் நான் யார்
உறவெல்லாம் தூரமாகிப்
போகும் பாரு
துயரத்த சொல்லிட்டாலே...
அவசர வேலையாக
வாசலில் இறங்கிய
நேரம் பார்த்து
வந்து சேர்ந்தான்
உறவினனென ஒருவன்...
வந்ததும் வந்தேன்
நாலு நாள் இருந்து
ஊரச் சுத்திப் பார்த்துட்டுப்
போறேன் என்றவனை
ஊரச் சுத்தி கடனிருக்கு
எல்லோர்கிட்டயும் நீ என்
உறவினனென சொல்லியிருக்கேன்
ஊர் சுத்திப் பார்க்கறப்ப
கடங்காரப் பசங்க உம்மை
சுத்தி சுத்தி வந்தா
நான் பொறுப்பில்லன்னதும்
மூட்டை கட்டிவிட்டான்
வாசலிலேயே...
இறுகினால் களி
இளகினா கூழுன்னு
என் துயரத்த சொல்லித்தான் பார்த்தேன்
ஓடிட்டான் பாரு
உறவுன்னு வந்தவன்
ஓடிட்டான் பாரு...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.