அதே வார்த்தைகள்...
குடிச்சுட்டு ரோட்டுல கெடந்தனா?
தெருவுல ஆடுனனா?
உன்ன அடிச்சனா?- இல்ல
உன்ன உங்கொப்பன் வீட்டுக்கு அனுப்பிட்டுக்
கூத்தியா வச்சனா?
நாங்குடிச்சா உனக்கென்னடி வலிக்குது?
எவன் குடிக்கல?
என்னப் போல அளவா
இத்தன நாளுக்கு ஒருதரமுன்னு
எவன் இருப்பான்?
ஒவ்வொரு முறையும்
சண்டையினூடே சொல்லிக் கொள்கிறாய்?
இவையெல்லாம்
குடிச்சே செத்தவனும்
குடும்பத்தக் கெடுத்தவனும்
இன்று ரோட்டில் கிடப்பவனும்
பயணங்களில் செத்தவனும்
நேற்றுச் சொன்ன
அதே வார்த்தைகள்தான் நண்பா..!!
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.