அந்தக் கிழங்கு...?
விஷக் கிழங்கு,
அது
வேரூன்றிவிட்டது ஆழத்தில்...
அகழந்து எடுத்துத்தான்
அப்புறப்படுத்த வேண்டும்,
அலட்சியம் கூடாது...
கொஞ்சம் அதில்
மிஞ்சி இருந்தாலும்,
மீண்டும் முளைத்துவிடும்...
எடுத்துவிடவேண்டுமென்பார்கள் எல்லோரும்,
எடுப்பவரை
ஏளனமும் செய்வார்கள்,
விளம்பரம் தேடிவந்து
ஒட்டிக் கொள்வார்கள்,
ஓடிவிடுவார்கள் பாதியில்...
அட,
கிழங்கு எடுப்பதில்
இத்தனை சிக்கலா...
சிக்கல்தான்,
ஆனாலும்
சீக்கிரம் எடுக்கவேண்டும்
சிரமப்பட்டுதான் எடுக்கவேண்டும்...
கிழங்கு-
ஊழல்...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.