கனியட்டும் நற்காலம்...!
மனமெங்கும் ஓட்டை
அகல மனமின்றி
அகலமாகிப் போனது
வீடெங்கும் வாசல்
வேடிக்கை உலகிற்கு
வேடிக்கையாகிப் போனது
புவியெங்கும் நிம்மதி
கானல் நீராய் நிறைந்து
கானலாகிப் போனது
மனிதமெங்கும் ஒற்றுமை
காசினியில் விலையாகும்
காசாகிப் போனது
எங்கெங்கும் சண்டை
இரத்த ஆறென பகுத்தறிவாளனின்
இரத்தநாளமாகிப் போனது
ஒழியவேண்டும் வேற்றுமை
ஒடுங்கிஅடங்க வேண்டும் பூசல்கள்
ஒற்றுமை கீதம் முழங்கவே
கனிய வேண்டும் நற்காலம்
கனிவான மொழி பேசும் மனிதம்
கனிந்து புவியில் உலவியே!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.