ம(னி)தம் எப்போது?
தானம்
இதற்காகவாவது
கண்தானம்
செய்யுங்களேன்...
காதலுக்குக்
கண்
இல்லை
என்கிறார்களே!
*****
எங்கே?
விவேகானந்தர்
விரும்பியது
இன்னும்
கிடைக்கவில்லை...
எங்கே
அந்த நூறு
இளைஞர்கள்?
*****
மருந்து
தொண்டர்களின்
மனக் காயத்தை
மா(ஆ)ற்றும்
மந்திரச்சொல்
தாய்மையே
வெல்லும்
*****
மதம்
யானைக்கு எப்போதாவதுதான்
பிடிக்கும்
எப்போதாவதுதான்
தீங்கு விளைவிக்கும்
மனிதர்களுக்கு
எப்போதும்
பிடிக்கும்
எங்கும்
எப்போதும்
தீங்குகள்
நடக்கும்
*****
முரண்
தகி்க்கும் வெயிலில்
தணலான தார்ச்சாலையில்
குளுகுளுவென மோர்
விற்கும்
தள்ளாடும் வயதுத்
தாய்
- சுப.தனபாலன், திண்டுக்கல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.