பரி(தாப)ணாம வளர்ச்சி
இதுதான் பொருள்
எல்லாக் கொள்ளையர்களும்
வள்ளுவர் வழியிலேயே
நடக்கிறார்கள்...
பொருளிலார்க்கு
இவ்வுலகம்
இல்லை
*****
வெற்றி
தர்மத்தின்
வாழ்வுதன்னை
சூது கவ்வும்
தர்மம்
எப்போதாவது
வெல்லும்
*****
மகிழ்ச்சி
என்
இனிய தமிழ் மக்களே
அகமகிழுங்கள்
இனி
தமிழ்த்தாய்
வாழ்த்தை
இந்தியிலும்
இசைக்கலாம்!
*****
வாழ்வு
வந்தாரை
வாழ வைக்கும்
தமிழகம்-
ஒருவேளை...
வந்தாரை மட்டும்தான்
என்றிருக்குமோ?
*****
வளர்ச்சி
திராவிடக் கட்சிகளுக்கு
ஆரியத் தலைமை
நல்ல
பரிணாம
(பரிதாப)
வளர்ச்சி!
- சுப.தனபாலன், திண்டுக்கல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.