படிப்பும் பாடமும்
உயிர்
பயிர்கள்
ஆயின
சாவி
பறந்து போனது
உழவனின்
ஆவி
*****
எதற்கு இதெல்லாம்?
இருமொழி
மும்மொழி
எல்லாம் எதற்காக?
நாங்கள்தான்
வாய்மூடி
மவுனிகளாகவே
எங்கும்
எப்போதும்
இருக்கப் போகிறோமே!
*****
ஒற்றுமை
மதமில்லை
இனமில்லை
மொழியில்லை
நாடில்லை
இதில்தான்
சமரசம்
இதுதான்
நோய்
*****
பாரம்பரியம்
சேலையே
கட்டாத
நடிகைகளைத்தான்
சேலைக்கடை
திறப்பு
விழாவிற்கு
அழைப்போம்
*****
பாடம்
தவறுகளிலிருந்து
பாடம்
கற்றுக் கொள்ள
வேண்டும்...
அதற்காகத்தான்
மற்றவர்கள்
தவறு
செய்யட்டும் என்று
காத்துக் கொண்டிருக்கிறோம்
*****
படிப்பு
பிள்ளைகளை
மருத்துவருக்கும்
பொறியாளருக்கும்
வழக்குரைஞருக்கும்
படிக்க வைக்கிறார்கள்...
அவர்களுக்காக
மட்டும்
படிக்க வைப்பதே
இல்லை
- சுப.தனபாலன், திண்டுக்கல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.