பல்லாண்டு நலமுடன் வாழ்வாயம்மா...!
சொல்லடா வாய் திறந்து
அம்மாஅப்பா யென்று
அன்புக் கடலில் கிடைத்த முத்தம்மா...!
கனியமுதே தோற்கும்
கன்னல் மொழியம்மா...
கண்மணி உந்தன் குரலம்மா...!
கனிவாய் அன்புக் கரம்நீட்டி
ஒற்றுமை வாழ்வை உலகிற்குணர்த்த
புவியில் உயிர்த்த கருணைக் கனியம்மா...!
இன்பதுன்ப வாழ்வினிலே
உயிர் மூச்சாய் வளமுடன் வாழ
நீயே நான்தேடிய அரிய சொத்தம்மா...!
அன்போடு பண்போடு
அளவற்ற ஆரோக்கிய வளம் பெற்று
மனிதருள் மாணிக்கமாய் கல்விகேள்விகளில் ஒளிர்ந்து
அடக்க ஒழுங்கில் உயர்வுற்று
பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்வாயம்மா...!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.