மௌனம் காக்கும்...
எனக்குக் கூரையாகிற
வயல்வெளிகளையும்
சன்னல்களாய்த் திறக்கும்
மலைத்தொடர்களையும்
உனக்கு நான்
வெகுசீக்கிரம் அறிமுகம் செய்வேன்.
எழுதுகோளாகும் தென்னையும்
தாளாகும் நிலவொளியும் கூட
உனக்குத் தெரியச் செய்வேன்.
காக்கையாய்க் கரையும்
கடிய வெயில்
கூலிக்காரப் பெண்ணாக மாறி
தன் உச்சியை நிமிர்ந்து பார்ப்பதை
நீயும் ரசிப்பாய்.
ஆனால்
அடிவயிறு கொள்ளாத புளி ஏப்பங்கள்
பற்றிய உன்கேள்விக்கான பதிலை
என்னிடம் எதிர்பார்க்காதே.
மாதக்கணக்காக
மௌனம் காக்கும் மலைப்பாம்பு
மானை விழுங்கியிருக்கும்!
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.