காதலாலே...!
பட்டு வானம் பளபளக்க உன்
பட்டு மேனி ஒளி ஒளிக்க
என் உள்ளமது துள்ளி விளையாட
எண்ணக் கிடைக்கைகள் துள்ளி இசைபாட
உந்தன் நினைவுதான் என்னை
தினம் தினம் வாட்டுகிறது.
வள்ளல் குணம் கொண்டவளே.
வள்ளுவனின் குறளுக்குச் சிறந்தவளே.
உவமை கொண்டவளே
உன்னை அகிலமே போற்றிடுமே.
காதல் மொழியால் என்னை
காயப்படுத்தியவள் நீ அல்லவா.
அதில் அன்புமொழி
சொல்லியவள் நீ அல்லவா.
வெள்ளை உள்ளம் கொண்டவளே
என்னை வேடந்தாங்கும் வெண் புறாவே
உன் காதல் வலையில் சிக்குண்டு
தவியாய்த் தவிக்கிறேன் விடை தெரியாமல்.
விண்னில் பாயும் எறிகனைகள்
இலக்கைத் தாக்கா விட்டாலும்
நீ என்மீது பார்க்கும் காதல் பார்வை.
அணையாத தீயாக எரிகிறது…
பருவம் அறிந்து பருவச்சிறகை விரித்தேன்
பருவம் மாறி பாதை மாறினேன்.
காதலாலே...
- ரூபன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.