தமிழே ஊக்கம்!
வள்ளுவம் வளர்த்த வண்டமிழ்-இது
வல்லினம் மெல்லினம் இடையினம் கொண்டதமிழ்
முக்கனி ஈன்ற சுவையினைப்போல்
முத்தென முத்தமிழ் இனித்திடுமே
துள்ளி குதித்திடும் பிள்ளையினைப்போல்
கன்னித்தமிழை நினைத்திடும் மனமதுவே
அள்ளிப் பருகிடும் ஆவலதுவே
பள்ளிப் பருவமுதல் படர்ந்ததுவே
மக்கு மடையன் என்றவரெல்லாம்
மங்கா தமிழ் நயம் கண்டதுமே
திக்குத் தெரியாமல் ஓடிவிட்டார்
பூக்கும் பூவின் வாசத்தைப் போல்-என்
வாக்கும் தமிழால் மணந்ததுவே
தாக்கம் ஆயிரம் இருந்தாலும்-என்
ஏக்கம் முழுவதும் தமிழல்லவா-மீளா
தூக்கம் அடையும் நாள்வரையும்
ஊக்கம் தமிழன்றி வேறில்லையே...!
- விஜயகுமார் வேல்முருகன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.