அப்பா என்றால்...!
தோள் மீது நீ போட்டு துயரங்களை நீ பகிர்ந்தாய்
சொல்லிச்சொல்லிப் பாராட்டி சுகத்தை நீ தந்தாய்
சுட்டி விரல் பிடித்து எட்டி எட்டி அடிவைக்க
முற்றத்தின் வீதியெல்லாம் சுற்றிக்காட்டினாய்.
நான் சுகமாக வாழ்ந்த நாட்கள் எல்லாம்
நீ சுமையாக வாழ்ந்தாய்.
அப்பா என்ற அலறல் ஓசை கேட்டால்
ஓடோடி வந்து கட்டி அணைத்திடுவாய்
அன்பையும் அறிவையும் நீ புகட்டி
தினம் தினம் நெஞ்சில் சுமந்தாயே.
இரவின் புன்னகை நிலவில் தாலாட்ட
மண்ணின் மடியில் அகரம் எழுதிக்காட்டினேன்
ஆகா என்று மகிழ்ந்தாயே.
ஆருயிர் இன்பம் -கண்டாயே.
கை வண்டி உருட்டும் அழகை பார்ப்பாயே
ஊரெல்லாம் என் பேச்சாய்த் திரிவாயே.
தூரமாகப் போனாலும்.
மிட்டாய் வேண்டி வருவாயே.
உண்டு நானும் மகிழ்ந்திடுவேன்
இரவில் நெஞ்சில் சுமப்பாயே
இனிய கதைகள் சொல்லிடுவாய்
இதமாய் நானும் மகிழ்ந்திடுவேன்.
அம்மா என்றால் அன்புதான்
அப்பா என்றால் அறிவுதான்...!
- ரூபன், இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.