மாமியார்கள் தெய்வமாக...?
படையலுக்கு மட்டும்
மருமக்கள்
மாமியார்களைத்
தெய்வமாக
நினைக்கிறார்கள்...
பட்சணங்களைப்
படைப்பதோடு
சரி
பல்லில் பட
விடுவதில்லை.
*****
காத்திருப்பு
முதிர்கன்னிகள்
அம்மி மிதிக்கும்
காலம் வந்தால்தான்
நில நடுக்கம்
நின்று போகும்
*****
குழந்தை வளர்ச்சி
வேகமாக
வளரும் குழந்தைகள்
இப்படியும்
எண்ணுகிறார்கள்
எய்ட்டீன்
நைன்ட்டீன்
ப்ரோட்டீன்
*****
ஊழலின் ஊற்றுக் கண்
திரையரங்குகளில்
நுழைவுச் சீட்டுக்குப் பதில்
முன்பதிவுச் சீட்டு
வாங்கிக் கொண்டு
முண்டியடித்துப்
போகும் இரசிகர்கள்
இவர்களுக்கு
ஊழலை ஒழிக்கப் போராடும்
தலைவனின் கதைதான்
தக்கதாய்த் தோன்றுகிறது
தாங்கள்
ஏமாற்றப்படுவதைத்
தவிர்த்து!
*****
கல்வி வள்ளல்கள்
இவர்கள்தான்
வள்ளல்கள் ஆயிற்றே...
அப்புறம்
ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?
*****
இதற்கு மட்டும் ஆகுமாமா?
சாதி
சமயம்
சனாதனம்
மடி
தீட்டு
சகலமும் பார்க்கும்
தலைவரின்
வீட்டில்
காபிக்கு மட்டு்ம்
கலப்பினப் பசு!
- சுப.தனபாலன், திண்டுக்கல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.