அன்பின் தந்தை!
ஈரைந்து மாதங்கள்
சுமந்தாள் அன்னை வயிற்றினிலே
ஈர்பத்து வருடங்கள்
சுமந்தாய் நீ வையகத்தினிலே...!
யான் பெற்ற கஷ்டங்கள்
என்றன் மகன் பெறான்
என்பதற்காய் கல்வியில்
எனை ஊக்கப்படுத்தினாய்...!
அகிலத்தில் சிறந்திட
ஆசானாய் நீயும்
அகரம் முதற் கொண்டு
அனைத்தும் போதித்தாய்...!
பல்கலையும் பயின்று
பட்டமும் பெற்றிட
பிதாவாய் நீயும்
பக்கபலமாய் ஆனாய்...!
தப்பதனைக் கண்டித்து
தலை நிமிர்ந்து வாழ
தகப்பனாய் நீயும்
தகுந்த வழிகாட்டினாய்...!
தோல்விகளைக் கண்டு
துவண்டு விடுகையிலே
அப்பாவாய் நீயும்
ஆறுதல் ஆனாய்...!
அன்பாலும் ஆதரவாலும்
அகத்தினின்றும் நீங்கா
என்றன் அன்பின் தந்தையை
என்றும் நினைவு கூர்கிறேன்...!
- பாஸித் மருதான், மருதமுனை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.